கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 20 ஜூன், 2012

நீலகேசி, -33

208போழுங் கண்ணுந் தலையுந் தடிகளுந்
தாழ மின்றி யிவைதம்மி னோவென
வாழு மாந்த ருழைவரு வாரில்லை
கூழன் றன்னுழை யேகொளச் செல்பவோ.


209பிளத்த லுள்ளிட்ட வாய்ச்செல் வதிந்திர
னளத்தற் கேலவன் றானறி யும்பிற
னுளத்தை யோரல னேலவன் றேவனாக்
கிளத்த றானோர் கிழமையும் போலுமே.


210யாவ னாயினு மன்னவ னின்மையிற்
றேவ னென்று தெளியுந் தெளிந்தபின்
சாவ னென்பதோர் சங்கைய மின்றியே
யீவ னென்பதோ ரிச்சையுந் தோன்றுமே.


211உறுதி யல்ல துணர்வடையான்றனக
கிறுதி யேலென்று மிந்திர னெண்ணலன்
மறுதி யின்மையின் மாணிழை நீயெங்குப்
பெறுதி முன்னெடு பின்னியை யாதவே.


212ஆத னாற்குறந் தாங்கெழு வான்றும்ம
வேத மில்சுட ரேற்றொரு தாமென்றான்
சாத கம்மிவற் றானருள் சாதிப்பா
னோதி னார்க்கு முணர்வொருப் பாயதே.


213எருது பாலின்மை யெண்ணலன் றும்மலே
கருது மாதனுங் கண் முத லாயின
தருத லல்லது தங்குறை யீதெனார்
மருதின் வாழ்பகை யானவிம் மாந்தரே.


214பாக மேபிளந் தாற்பர காயமொன்
றாகு மேயென வீவ· தாதன்மை
காக மேயுண்ணுங் கண்ணுமற் றன்னதே
யேக மெய்யும்விண் டாலியை யார்களே.


215உள்ளந் தானிரு பாகினு முண்மையாற்
கொள்கின் றானிவ னேகொல்லு வான்றனை
யெள்ளி நேரு மறிவில்லை யேற்பிணங்
கொள்ளென் றீர்ந்து கொடுப்பினுங் கூடுமோ.


216கூறு கூறுசெய் தாலுடம் புள்ளுயிர்
வேறு வேறு செலல்வெளி றாக்கொளாய்
பாறு வாயுரைக் கும்பர மாத்தங்க
டேறு வாருள ரோதெருண் டார்களே.


217புத்த னார்வண்ணங் கண்ட புனையிழை
சித்த னேயென்னைச் சேர்மின மென்றலி
னத்த கன்னருள் செய்கல னாய்விடின்
மத்த கம்பிளந் தானென்றன் மாயமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;