கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 22 ஜூன், 2012

நீலகேசி, -35

அர்க்க சந்திர வாதம்


232உஞ்சை மாநக ரெய்தின ளாயத
னிஞ்சி மாட்சியு மெல்லையில் செம்மலு
மஞ்சு தோய்நெடு மாடமும் வீதியு
மஞ்சி லோதி யவையவை கண்டபின்


233பருக்கை மால்களி யானைப்பல் வேந்தரு
மிருக்க போதக வென்னும் பெருமையான்
றருக்க நீட்டமுந் தன்னிக ரில்லவ
னருக்க சந்திர னென்னு மவாச்சியன்.


234போதி சத்துவர் புத்த ரெனப்படு
நீதி யிற்பெரி யாரன நீ¡;மையா
னோதி நூன்மும்மை யொப்ப வுணர்ந்தவன்
வாதி கட்கோர் வயப்புலி யேறனான்.


235மாடமோங்கி மழைநுழைந் தின்குயில்
பாடு பூம்பொழிற் பாங்கரோர் பள்ளியுட்
பீட மேறிப் பெருந்தகை யார்க்கெலாம்
வீடு பேறும் வினையு முரைப்புழி.


236சென்று தானெய்திச் சிற்பிடத் தாற்புக்குத்
துன்று நீண்மணித் தூணணிந் தெண்ணென
நின்று நீலவைம் பாற்பெய ராளுமங்
கொன்று பல்வகை யோத்துரை கேட்டனள்.


237கொள்ளு மாறுந்தன் கோரகை யுட்கஞ்சி
மொள்ளு மாறு முதுகு நெளித்துண்டு
னள்ளு மாறு மணலெடுத் திட்டவை
மெள்ள மெள்ள விழுங்கு மவைகளும்.


238வழிக்கு மாறுந்தம் மண்டையி னுண்டுமன்
ஒழிக்கு மாறும· தூட்டு மவைகளும்
மழிக்கு மாறுந் தலைகளை மையிட்டு
விழிக்கு மாறும் வினைய விதியினால்.


239இனைய வேசொல்லி யிட்ட தலையராய்
வினைய நூலை வியப்பெய்து வார்க்கெலா
மனைய தேநு மறநெறி யென்றனள்
முனைவன் றன்னெறி முன்ன முணர்ந்தவள்.


240அவ்வு ரையம ரானுய ராசனச்
செவ்வ ரைம்மிசைத் தீத்திரள் போல்பவ
னிவ்வு ரையிவ ணென்னெனச் சொல்லினான்
றெவ்வ ரைத்திறல் வாட்டிய திண்மையான்.


241வீரஞ் செய்து விழியல் வினையநூல்
பேர த·தேல் பெரிது மழகிதே
யோரு ம·தோ ருறுவினை யென்பதைத்
தேரச் சொல்லுநின் றிண்பொரு ளென்றனள்.


242வினைய தாகிய பெற்றி விரித்துநீ
தினையி னேரும் தெருட்டெனக் கென்னவே
அனைய வவ்விர தத்தோ டறிசல
மினைய கேளென் றெடுத்தன சொல்லுமே.


243தன்னை யீந்ததும் தாரங்க ளீந்தது
மன்ன தன்பொருள் கேட்டறங் கொண்டவன்
மன்னு மில்லயன் மாந்தரைக் காணுமேற்
பின்னைச் செய்வன பேசலு மாகுமோ.


244காம மூரிற் கணிகைய ரோடன்ன
தூய்மை யுண்மையிற் றோற்றங் கரந்தவட்
சேம மாவகைச் செல்கமற் றென்பதும்
வாம நூலின் மறைபொரு ளல்லவோ.


245சிங்க தத்த ரெனப்படுந் தேரனார்
சங்க போதியி லாள்கட் டயாச்செய
விங்கி தென்னென வேழாய் தவசிகட்
கெங்கெங் காமி லெனவுரைத் தானரோ.


246யாது மில்லை யுயிரென் றறநெறி
யோதி னானவ் வுயிரிலி தன்னொடு
வேத னைதணிப் பான்வினை வீட்டிற்கும்
சாத னைநிற்குஞ் சத்துவ னாமென்றீர்.


247சித்த மோடிக் கலங்கித் திரியாத
நத்தம் பெற்றது நற்றவ மேற்கொண்டான்
பத்தின் மேலும் பழிசெய்யு மேற்பள்ளி
வத்தன கண்டீ¡; வழக்கின்கட் கூரியீர்.


248போதி யாருரு வெய்திய புற்கலர்
வேதி யாற்கிடந் தாருள ராயினான்
ஞாதி யாரென நாட்டிய கூட்டமும்
ஓதி வைத்ததொன் றுண்மை யுணர்த்துமால்


249ஆரம் பிச்சி யலிவிலங் கவ்வுருச்
சீரிற் கொத்தாள் கணிகை தெருண்டாள்பெண்
ஒரு மில்லா ளுயிரிலி யூமையுந்
தார மாக்கொ·டி ரென்றல் சலமதோ.


250பிறந்த வில்லினுள் வாழ்க்கை பிழைப்பெனு
மறங்கொண் டான்கொண் டவாச்சிய வேடத்தாற்
சிறந்த வல்லன சிங்கின வெங்கணுந்
துறந்த வான்பொருள் சொல்லவும் வல்லையோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;