கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 30 அக்டோபர், 2013

2. மெய் எழுத்துகள்

2.  மெய் எழுத்துகள் 

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், 
வ், ழ், ள், ற், ன். என்ற பதினெட்டு 
எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். 
இவை தமிழ் மொழிக்கு மெய் (உடல்) 
போன்ற எழுத்துகள் ஆகும். 

மெய் எழுத்துகளின் வகைகள் 

இதை இரண்டாக பிரிக்கலாம்

1.வல்லின மெல்லின இடையின 
    எழுத்துகள் 

2.குறில் நெடில் எழுத்துகள் 

1.
வல்லின மெல்லின இடையின 
    எழுத்துகள் 

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ்
, ள், ற், ன். மெய் (உடல்) எழுத்துகளை 
மூன்றாகப் பிரிக்கலாம். 

அ.வல்லின எழுத்துகள் 
ஆ.மெல்லின எழுத்துகள் 
இ.இடையின எழுத்துகள் 


அ.
வல்லின எழுத்துகள் 

க், ச், ட், த், ப், ற் என்ற எழுத்துகளைச் 
சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்து
களைச் சொல்லும் பொழுது வயிற்றுள் 
இருந்து வலிமையாக காற்று மேலே 
வரும். எனவே இவை வல்லின 
எழுத்துகள் ஆகும். 

ஆ.
மெல்லின எழுத்துகள் 

ங், ஞ், ண், ந், ம், ன் என்ற எழுத்துகளைச் 
சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துக
ளைச் சொல்ல மென்மையான முயற்சி 
போதும். எனவே இந்த மென்மையான 
எழுத்துகள் மெல்லின எழுத்துகள் 
எனப்படுகின்றன. 

இ.
இடையின எழுத்துகள் 

ய், ர், ல், வ், ழ், ள் என்ற எழுத்துகளைச் 
சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துக
ளைச் சொல்ல மென்மையும், வன்மை
யும் இல்லாமல் இடைப்பட்ட முயற்சி 
தேவைப்படுகிறது. எனவே இவை 
இடையின எழுத்துகள் எனப்படுகின்றன. 


2.
குறில் நெடில் எழுத்துகள் 

குறுகிய ஓசை, நெடிய 
ஓசை என்பதை எதை 
வைத்து அளவு செய்வது? 

அ ஆ க கா கொ கோ குறில் நெடில் இந்த 
எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள். 
ஒலி அளவில் நீங்கள் வேறுபாட்டை 
உணர முடியும். எழுத்துகள் ஒலிக்கும் 
அளவை மாத்திரை எனக் குறிப்பிடுவர் 

மாத்திரை 

இலக்கண ஆசிரியர்கள். இது ஒரு கை 
நொடி அளவு : (அதாவது கட்டை விரலை
யும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டும் 
அளவு) அல்லது கண்ணிமை அளவு - 
(அதாவது கண் இமைக்கும் அளவு) என்று 
கணக்கிடப்படுகிறது. 

மெய் எழுத்து ஒலிப்புநேரம் 1/2 மாத்திரை 
ஆகும் • 

எழுத்துகளின் ஒலி அளவு 

அ. குறில் 
ஆ. நெடில் 

அ. 
குறில் 

என உயிர் எழுத்துகளையும், உயிர்
மெய் எழுத்துகளையும் பிரிக்கி
றோம். மெய் எழுத்துகள் உயிர்க்
குறில் எழுத்துகளைவிடக் குறை
வான நேரத்தில் ஒலிக்கப்படு
கின்றனஎனவே, குறில் எழுத்துகள் 
- 1 மாத்திரை அளவின. (அ,க,ச,சி,து) 

ஆ. 
நெடில் 

நெடில் எழுத்துகள் - 2 மாத்திரை 
அளவின (ஆ, கா, சா, சீ, தூ) மெய் 
எழுத்துகள் - 1/2 மாத்திரை அளவின.
 (க், ங், ச், ஞ்.....ன்) என்பதை நினைவில்
 கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;